பூக்கடையில் நீ சிரிக்கிறாய்

பூக்கடை ஓரம்
சாக்கடையும் ஓடுது
பூக்களுடன் நீ சிரிக்கிறாய்
பூக்கள் சிந்துது தேனை
புன்னகை சிந்துகிறாய் நீ
பூக்களையும் உன்னையும் ரசிக்கவோ
ஓடும் சாக்கடையைப் பார்த்து முகம் சுளிக்கவோ
என்ன செய்வதடி தோழி !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Dec-20, 10:12 am)
பார்வை : 93

மேலே