பிதாஜி, பிதாஜின்னு கூப்படறாங்க அம்மா

மகனே பொன்வண்ணா, மாமியார் வீட்டு மறு அழைப்புக்கு போனவன் ஏன்டா நீ மட்டும் தலையைத் தொங்கப் போட்டுட்டு வந்து நிக்கற?
◆◆◆◆◆◆◆
அம்மா, தாய் தந்தை இல்லாத அந்தக் கண்மணியை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க. அவுங்க அத்தைதான் அவுங்கள கடந்த அஞ்சு வருசமா வளத்தாங்களாம். கண்மணிக்கு அஞ்சு வயசு நடக்கறபோது அவுங்க அம்மா தவறிட்டாங்களாம். அவுங்க அப்பாவும் கண்மணிக்கு பதினஞ்சு வயசு ஆகிறபோது ஒரு விபத்தில இறந்துட்டாராம். அப்பறமா அவுங்க அத்தைதான் பராமரிச்சு வளத்து எனக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்தாங்க. இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்ச விசயம்.
◆◆◆◆◆◆◆◆◆
எங்களுக்கு தெரியாத விசயம் என்னடா பொன்வண்ணா?
★★★★★★★■★★
அவுங்க அப்பா இறந்ததுக்கப்பறம். அவுங்க அப்பா படத்துக்கு தினமும் இரண்டு வேளை பூமாலை போட்டு "அப்பா, அப்பா"ன்னு நூத்தியெட்டுத் தடவை சொல்லறது வழக்கமாம். நான் மறு அழைப்புக்கு அவுங்கூடப் போனதும் அவுங்க எங் கால்ல விழுந்து வணங்கி "பிதாஜி, பிதாஜி"ன்னு பத்துத்தடவை சொல்லி என் பாதத்தை தொட்டு வணங்கினாங்க. நான் அவுங்க அத்தைகிட்ட இதப்பத்திக் கேட்டேன்.
@@@@@@@
அவுங்க என்ன சொன்னாங்க?
★★★★★★★★★
தம்பி, என் அண்ணன் பொண்ணு அவ அப்பா மேல உயிரையே வச்சிருக்கிறா. நீ கடைசி வரைக்கும் அவளோட வாழப்போற. உன்னை அவ அவளோட அப்பாவுக்கு சமமா மதிக்கிறா. நீ அவளோட கணவன். உன்னை அவள் "அப்பா"ன்னு கூப்படமுடியாது. அதனால உன்னை "பிதாஜி"ன்னு கூப்படறா. இந்த கிராமத்தில யாருக்கும் "பிதாஜி"க்கு என்ன அர்த்தம்னு தெரியாது. பக்கத்து வீட்டுக்காரங்க "உங்க அண்ணன் பொண்ணு கண்மணி அவளோட கணவனை 'பிதாஜி'ன்னு கூப்படறாளே அதற்கு என்ன அர்த்தம்"னு கேட்டாங்க. 'பிதாஜி'ன்னா 'அப்பா',ன்னு அர்த்தம்னு சொன்னா நல்லா இருக்காதுன்னு இந்தில 'பிதாஜி'ன்னா 'மாமா'ன்னு அர்த்தம்னு சொல்லிட்டேன் தம்பி"ன்னு சொன்னாங்க அம்மா
■■■■■■■■■■
அட போடா பொன்வண்ணா. கண்மணி அவ ஆசைக்கு உன்னைப் 'பிதாஜி'ன்னு கூப்படறா. இதைப் போயி நீ பெருசா எடுத்துக்கறதா?. நாளைக்கு அப்பா, நான் ,நீ மூணுபேரும் கண்மணியைப் பாக்கப்போறாம். அவகிட்டச் சொல்லி உன்னை அவ "மாமா"ன்னு கூப்பிடணும் இல்லன்னா எங்க பையன் பொன்வண்ணன் கோவிச்சிட்டு எங்க வீட்டுக்கு வந்திருவான்"னு சொல்லிடலாம்.
■■■■■
சரிம்மா.

எழுதியவர் : மலர் (13-Dec-20, 7:36 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 120

மேலே