வானம் நமதே
உனக்கும் எனக்குமானது தான் வானம்
வா பங்கிட்டுக் கொள்வோம்
உன் கைகள் விரிந்த அளவில் நீயும்
என் கைகள் விரிந்த அளவில் நானும்
எட்டி பிடிக்க முயல்வது வீண்
பிடித்தாலும் எந்த அலமாரியில் வைக்க
இரவும் பகலும் இன்றும் நாளையும்
நமது பங்கு அங்கு தான் இருக்கும்
சொல்ல முடியாது ஒரு வேளை
நாளை மறுநாள் காணாமல் போகலாம்
நிலவுக்கு மிக அருகில் என்று
மனை தரகர்கள் விற்று இருப்பார்கள்
பதற்றம் கொள்ளாதே
இரண்டு அடி தள்ளி நின்று
மீண்டும் கைகள் விரித்து பங்கிடுவோம்
உன் கைகள் விரிந்த அளவில் உனக்கும்
என் கைகள் விரிந்த அளவில் எனக்கும்