முகநூல் பதிவு 231

எதிலும் அதிகப் பொறுமை காட்டுவது
எல்லா காரியங்களிலும் சரிவராது...
எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்படுவது
எப்போதுமே சரிவராது....

எடுத்துக் கொண்ட காரியத்தின் அவசியம், கால அவகாசம், அத்தனையும் கருத்தில் கொண்டு
துரிதமாக செய்ய வேண்டியதா
தகுந்த நேரம் பார்த்து நிதானமாய் செய்து முடிக்க வேண்டியதா
என்று சிந்தித்து செயல்படுவதே
வினை வெற்றிக்கு அனுகூலம் ஆகும்!

எழுதியவர் : வை.அமுதா (19-Dec-20, 11:09 pm)
பார்வை : 92

மேலே