நிலவே சாட்சி

அவன் வரவுக்காக காத்திருந்தாள் அவள்
அவன் வருவான் வருவான் என்று
கண்ணுறங்காது ... நிலவும் நீலவானில் வந்தது
நிலவோடு அவள் பேசி அளவளாவினாள்
நேரம் போனதே தெரியாது நிலவும்
தனிமையில் வாடி நிற்கும் அவளுக்கு
துணையாய் இருந்தது நட்பின் சிகரமாய்
விடியலுமானது நிலவும் அவளிடம் விடைபெற்று
மெள்ள நகர்ந்தது .... அவன் வந்து நின்றான்
இப்போது ....'. உனக்காகவே காத்து நின்றேன்
இரவெல்லாம் இப்படி நீ வாராது போனதேன் '
என்க..... அவன் ஏதேதோ சொல்ல பார்க்க
அவன் கன்னத்தின் செந்தூர சிதறல்
காட்டிக்கொடுத்து விட்டது .... அவன் இரவில்
'அவள்' வீட்டில் தங்கி இருந்து வந்தான் என்று
'நீ காத்திருந்ததை நான் நம்புவது எப்படி ' என்றான்
அதற்கவள் ... அபலையின் வாக்கு எடுபடாது
'அந்த நிலவே சாட்சி என்றாளே' அவன்
வாயடைத்து போனான் ஒன்றும் பேசாது .

எழுதியவர் : (29-Dec-20, 1:57 pm)
Tanglish : nilave saatchi
பார்வை : 233

மேலே