எந்தன் தாமரையே
மொட்டிலும் அழகு தாமரை
மொட்டு அலர்ந்து கமழ
சொட்டும் அழகு தாமரை
வண்டுகள் தேனுக்கு மொய்த்திட
தண்டும் அழகு தாமரை
பெரிய நீலப்பச்சை இலையும்
முற்றும் அழகு அதனால்
தாமரை மலர்களில் மகராணி
நீயும் அப்படித்தான் பெண்ணே
அந்த தாமரைப்பூ போல
என்னென்பேன் உந்தன் வடிவழகை
நீயும் தாமரையே எனக்கு
உச்சந் தலை முதல்
உள்ளங் கால் வரை
உந்தன் வதனம் தாமரை
கண்களோ கமலக் கண்கள்
கைகளும் வண்ணத்து தாமரை
உள்ளங் கைகளின் சிவப்பும்
உந்தன் இடையும் தாமரைத் தண்டு
நகில்கள் இரண்டும் கமலமொட்டு
இடையே தாமரைத் தண்டு
நீ இடையில் உடுத்திய
பட்டு சேலையும் தாமரை இலையே
தாமரைப் பூவடி நீஎனக்கு