உனக்கு மரம் எனக்கு செடி
டேய் பங்காளி, போன வாரம் பொறந்த உன் பெண் குழந்தைக்கு நீ என்ன பேருடா வச்ச?
########
எல்லாரும் அவுங்க அவுங்க பிள்ளைங்ளுக்கு வைக்கிற மாதிரி நானும் என் பொண்ணுக்கு தூய்மையான இந்திப் பேரை வச்சு தற்கால தமிழர் நாகரிகத்தைக் காப்பாத்திட்டன்டா பங்காளி.
#########
சரிடா. என்ன பேருன்னு சொல்லுடா?
#######
உம். சரி.... உலகத் தமிழர்கள் யாரும் அவுங்க பிள்ளைங்களுக்கு வைக்காத இந்திப் பேரை என் பொண்ணுக்கு வச்சிருக்கிறேன்டா பங்கு.
#@@@#@@@@
அதைத்தான் சொல்லுடா பங்கு.
##########
என் பொண்ணுப் பேரு 'பியா'.
#######
என்னது 'பியா'வா? உம் பொண்ணு பேரக் காதில கேட்கிறவங்க அவுங்க பொண்ணுங்களுக்கு 'கியா', 'மியா'னு எல்லாம் கண்டிப்பா பேரு வைப்பாங்கடா. நம்ம ஊருக்கு நீ வழி காட்டிடா.
#########
சரி அடுத்த மாசம் உன் மனைவிக்கு பொறக்கறது ஆண் பிள்ளையா பொறந்தா என்ன பேரு வைக்கிறதா நீயும் உன் மனைவி இளவரசியும் முடிவு பண்ணீட்டீங்களா?
#######
இளவரசி தங்கமான பொண்ணு. என் முடிவுக்கு மறுப்புச் சொல்லமாட்டாடா. "மாமா, என் பேரு 'இளவரசி'. உங்க பேரு 'தங்கமுத்து'. மத்தவங்க மாதிரி எனக்கு பொறக்கப்போற கொழந்நைக்கு இந்திப் பேரை வச்சு நம்ம செம்மொழி தமிழையும் நம்ம கொழந்தையும் இழிவு செய்யக்கூடாது. உங்களுக்கு பிடிச்ச நல்ல தமிழ்ப் பேரா வையுங்க"ன்னு சொன்னாடா.
#######
அது உங்க விருப்பம். சரி பேரை முடிவு பண்ணீட்டயா?
########
இல்லடா. உன் பொண்ணுப் பேரு 'பியா'ன்னு சொன்ன. அந்தப் பேருக்கு என்னடா அர்த்தம்?
########
'பியா'ன்னா (Piya = tree) 'மரம்'னு அர்த்தம்டா.
#########
ஓ......'பியா'ன்னா 'மரம்'. என் பொண்ணுப் பேரை முடிவு மண்ணீட்டன்டா பங்காளி.
#######
என்ன பேருடா?
#######
நீ 'மரம்'னா நான் 'செடி'டா.
#######
என்னடா சொல்லற?
######
நானும் இளவரசியும் தமிழ்ப் பற்றுள்ள குடும்பங்கள்ல பொறந்தவங்கடா. நாங்க உயிரே போனாலும் வேற மொழிப் பேருங்கள வைக்கிறது எங்க குடும்ப வழக்கம் இல்லை. நாங்க பசுமை விரும்பிகள். எங்களுக்கு பொறக்கப்போற கொழந்தை ஆணா இருந்தாலும் பொண்ணா இருந்தாலும் ஆந்தக் கொழந்தை பேரு 'செடி'. 'செடி'டா.
#######
உங்கள் விருப்பம். சிந்தாபாத்துடா.
########
"வாழ்க, வெல்க"னு சொல்லுடா. சிந்தா பாத்து, சிந்தாத பாத்து எல்லாம் நமக்கு எதுக்குடா?
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■ ■■■■■ ■■■■■■■
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்