பாரினில் உனக்கிணை எவருண்டு
பாரினில் உனக்கிணை எவருண்டு?
*****
குறிஞ்சி மலர்போல வாடாமென் தேகம்
விரிந்த தாமரையும் நாணமுறும் உனைநோக்க
அரியின் திருமகளாய் என்னோடு நீயிருக்க-
இப்
பாரினில் எவருண்டு உனக்கிணை?ஒருவரிலை
ஒருநூறு விழுக்காடும் போதும் உனக்கிடவே!