குழந்தையின் கவிதை

🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣

*கவிதைக்கு கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣

பொன்னை விட

மண்ணே மதிப்புமிக்கது

குழந்தைகளுக்கு


🐥🐥🐥🐥🐥🐥🐥🐥🐥🐥🐥

அழும் போது கூட

அழகாகத்தான் இருக்கும்

குழந்தையின் முகம்

🐤🐤🐤🐤🐤🐤🐤🐤🐤🐤🐤

யாராலும் எழுத முடியாத

ஒரு கவிதை

குழந்தையின் சிரிப்பு


🐻🐻🐻🐻🐻🐻🐻🐻🐻🐻🐻

பொம்மைகள்

உயிர் பெற்று விடுகிறது

குழந்தையின் கைகளில்

🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰

பொருட்கள் உடையாமல்

மனம் உடைந்து

குழந்தையில்லாத வீடு


*கவிதை ரசிகன்*

🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣

எழுதியவர் : கவிதை ரசிகன் (23-Jan-21, 9:22 pm)
பார்வை : 147

மேலே