போன்சாய் கவிதை

(போன்சாய் கவிதை )
🦅
......
1) உலகமே
வைத்தியசாலை ஆக்கியது
கொரோனா
.......
2) காற்றுக்கு என்ன வேலி
யார் சொன்னது
முகக்கவசம்
......

3) குற்றம் செய்யாதவருக்கும்.
வீட்டுச்சிறை.
தனிமைப்படுத்தல்
.....

4) ஜனநாயகக்கடமை.
நீண்ட வரிசையில் நின்று
வாக்களிப்பு.
தலைவர் வீடியோ உரை
......

5) மழை மகிழ்ச்சிக்கும்
மரணத்துக்கும்
காரணமாகிறது.
தவளை.
@
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (30-Jan-21, 2:14 pm)
பார்வை : 218

மேலே