அவள் என்னிலா

என்னறை ஜன்னலைத் திறந்தேன் வானில்
தேன் நிலவாய் பூரண நிலா காட்சி....
நிலவிடம் சொன்னேன்.... நிலவே இன்னும்
எதிர் வீட்டு ஜன்னல் திறக்கலையே
'என்னிலாவின் எழில் காட்சி நான் காண
என்றேன்..... சொல்லி முடிக்கவில்லை
எதிர்வீட்டு ஜன்னல் திறக்க ........
வான்நிலா வானில் காணாது போனது
'எண்ணிலவாய்' மாறியதோ என்கண்முன்
எதிர்வீட்டு ஜன்னலில் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Jan-21, 2:29 pm)
பார்வை : 210

சிறந்த கவிதைகள்

மேலே