குளக்கரை இளங்காற்று

அம்மாவின் அரவணைப்பைப் போல, அலைகளைக் கடந்து வந்து, தழுவிச் சென்றது காலைவேளை இளங்காற்று.....
கொஞ்சம் வெப்பம் தான், ஆனாலும் பிடித்திருக்கிறது.....
அதிகாலை குழம்பி போல.....
இன்னும், சிறிதுநேரம் இருக்கலாமென்று எண்ணுகையில்.....
அரைநொடி பொறுக்கவில்லை..... என்னவளின் உணர்வுகள், இளங்காற்றைத் தாண்டி என்னைத் தழுவிச் சென்றது....
கைப்பேசியின் குறுஞ்செய்தியிலோ, தவறிய அழைப்பிலோ வந்திருப்பாளோ...!
உணரும் நொடிக்கு முன்.... ஒரு,
சொல் அழைப்பில் என் உணர்வுகளை
அள்ளிச் சென்றாள், அந்த குளக்கரை இளங்காற்றோடு......

வேல் முனியசாமி.

எழுதியவர் : வேல் முனியசாமி (31-Jan-21, 10:25 am)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 99

மேலே