காதல் கிறுக்கல்
நான் அவள் அழகை கவிதையாக்கி
அவளிடம் 'காதல் மடலைத் 'தந்தேன்
அவள் அதை பெற்று படித்தாள்
பின்னர் இசைத்து பாடினாள் மெய்மறந்தேன்
என் கவிதை அவளானது அவள் அழகானது
கவிதை மடந்தையாய் ஆடியும் பாடியும் .....
கண்மூடி கற்பனையிலிருந்த நான் மீண்டும்
கண் திறக்க என்கையில் நான் எழுதிய
'காதல் மடல்' ...... அவள் இல்லை
இசையாய் ஒலித்த என் கவிதை...
கவிதை மட்டும் இருக்க ... இசை இல்லை
அவள்.... அந்த அவளும் இல்லை.