மனதை திருடிய தேவதை
கார்மேகம் காட்டை கண்டு
கட்டுண்டு நின்றேனடி !
வட்ட நிலவின் பிறை நெற்றியடி !
இமைக்களிரண்டு துடிக்கும்
விநாடி முள்ளடி !
உன் விழி இரண்டும் மின்னல் வீச்சடி!
விழுந்து பின் எழ மறுக்கிறது....
என் கண்கள் தானடி !
வில் போன்ற புருவங்கள் தாக்கி விட துடிக்குதடி !
காதில் கம்மல் ஆடுகையில்
என் காதல் உணர்ச்சி பெருக்குதடி !
உன் கன்னம் இரண்டும் தாமரை மலரின் மென்மை கொண்டுதடி !
பவள முத்துக்கள் உன் பற்களில் மின்னுதடி !
தேன் சுவை உதடு என் மனதை வாட்டுதடி !
மார்பின் அழகை கண்டு மனம் பித்துபிடித்து போனதடி !
மலை பாதை வழியடி உன் இடுப்பு !
இடையில் மயங்கி விழ சொல்லுதடி உன் வனப்பு !
உன்னை தழுவி கொள்ள தோணுதடி!
காற்றாய் மாறி என் மனம்.....
மனதை திருடிய தேவதையே சம்யுக்தா !....