காணோம்

காணோம்

நேரிசை ஆசிரியப்பா

பாட்டன் பேரை பேரனுக் கிடுவர்
பாட்டன் பேரும் பாலன் பெருமாள்
ரங்க பாஷ்யம் வேதகிரி சபேசன்
வேலன் கந்தன் வேதகிரி ஷண்முகம்
கணபதி சீதாபதி மங்கபதி சர்வேசன்
ஆறுமுகம் சபாபதி ஆதிமூலம் லிங்கம்
பூஷணம். நடேசன் கோபால் ஏழுமலை
இரத்தினம் பேர்கள் இன்னும் இன்னும்
பாட்டிகளோ ரஞ்சிதம் ராஜம் சாரதா
லட்சுமி குசலா திலகா யமுனா
சீதா ஆண்டாள் கோகிலா சியாமளா
தைலா கிருஷ்ணமமா வேணி அம்புஜம்
பங்கஜம் கமலா ராதா அமிர்தம்
பர்வதம் தேவகி யசோதா அனுசுயா
ரங்கம்மா அகிலாண்டம் விசாலி வைதேகி
வள்ளி அல்லி அனைத்துப் பேரும்
வழக்கிலா ஒழிந்து அழிந்தது
இதைத்தான் கலாச்சார சீரழிவு என்பதோ


.......

எழுதியவர் : பழனிராஜன் (9-Feb-21, 6:55 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 53

மேலே