பிறவிக்குணம்
ஒவ்வொரு மனிதனுக்கும்
ஒவ்வொரு
குணம் இருக்கும் ...!!
அவரவர் பாதையில்
அவரவர்
பயணம் செய்தால்தான்
போன பாதை ...!!
சரியா...தவறா என்று
பயணத்தின்
அனுபவம் கிடைக்கும் ...!!
நாம் முன்கூட்டியே
சொன்னால் புரியாது...!!
கல்லாத மாந்தர்க்கு
கற்று உணர்ந்தோர் சொல்வது
எல்லாம் குற்றம் என்பது போல்
நம்மை வெறுப்பார்கள்..!!
பிறவிக்குணம் என்பது
ஒரு போதும் மாறாது ..
நாயின் வாலை நிமிர்த்தி
வைக்கிறேன் என்று
முயற்சி செய்தால்
பலன் கிட்டுமா ...!!
--கோவை சுபா