மறை அறிந்திடு

வேதம் இறைவன் மக்களுக்கு தந்த
போதம் அஞானம் போக்கும் ஞானம்
அதன்மூலம் அந்த பராமனைக் காண
வைக்கும் ஞானம் இதைத்தான் மறையென
தமிழில் கூறுவார் மறை மறைப்பது
அதனுள் இருந்து ஒளிரும் பரமனை
முறையான குருவின் போதனையில் மறையைக்
கற்றால் மறைந்திருக்கும் மாயோன் காட்சி
தருவான் நம்மை ஆட்கொண்டு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Feb-21, 1:26 pm)
பார்வை : 54

மேலே