அகிலத்தை ஆளமுடியும் உணர்
யாரையும் பழிக்காதே வெறுக்காதே துதிக்காதே
ஆற்றல் மிக்கோர் என்பாரின் அறிவைப்பார்
அவர் கொண்ட அறிவை மிஞ்ச செயல்படு
தேடு நுண்ணியமாய் அறிந்து தெளி வலிமையாய்
அறிவை விட உயர்ந்த ஆயுதமில்லை உலகில்
இகழ்ந்தோர் எதிரில் அறிவால் சிறந்து எழுந்துநில்
ஆயுதங்கொண்டு ஆர்ப்பரிக்காதே திரும்பி தாக்கும்
ஆயுதம் எளிதில் இடமாறும் ஆனால் அறிவு பயங்காட்டும்
அரசின் தளர்வால் வென்றாலும் தேடி அறிவு கொள்
நியாயத்தை எதற்காகவும் நொடி பொழுதும் சிதைக்காதே
சிதைந்த நியாயம் நேர்ப்பட பற்பல ஆண்டுகள் ஆகும்
இணையாய் எவற்றையும் பார் கர்வம் கொள்ளாதே
பூடகங்கள் நிறைந்தது தமிழ் இலக்கண இலக்கியங்கள்
புலப்பட்டுத் தெளிந்தால் தெளிந்தோருக்கு இணையில்லை
ஆதி இனமான நம்மாலே அகிலத்தை ஆளமுடியும் உணர்.
------- நன்னாடன்.