அகரம் முதல் ஒளகாரம் வரையில்

குறட்டாழிசை பா

"அ" வெனும் உயிர்ச்சொல் அழகுத் தமிழில் தோன்றிய
முறையோ அன்பின் வழிநிலை உந்திய மகிழ்வினால்

குறட்டாழிசை பா

"ஆ" வெனும் நெடிலும் ஆளுவது தமிழை ஆவின
உயிரின் அன்பின் ஓசையால் தோன்றிய வழியால்

குறள்வெண்செந்துறை பா

"இ"வெனும் எழுத்து இதன்பின் சேர்ந்தே இருப்பதும்
இறையெனும் படைப்பை உணர்ந்த பெரிய நினைவால்

குறள்வெண்செந்துறை பா

"ஈ"வெனும் நீளோசை சொல்லும் பகிர்ந்து கொடுத்தே
பல்லுயிர் ஓம்பி வாழவே வழிகோல வந்ததாம்

குறள்வெண்செந்துறை பா

"உ"வெனும் மூன்றாம் ஒன்றையே சுட்டவே உருவாக்கி
உணர்வு பெற்றிணைந்த உடமைச் சொல்லே ஆகும்

குறள்வெண்செந்துறை பா

"ஊ"வெனும் வார்த்தை குழவியின் வாயினில் தோன்றி
உயிர்பயம் காட்டவே இயற்கையில் உருவான எழுத்தே

குறள்வெண்செந்துறை பா

"எ"வெனும் எழுத்தே வினாக்களை கேட்டவே ஆனதாம்
எதனையும் உற்று நோக்கியே தெளியவே உகந்தது

குறள்வெண்செந்துறை பா

"ஏ"வெனும் சொல்லும் ஏற்றம் பெறுவதை காட்டியே
ஏணியாய் எக்காலம் நடத்தும் முன்கள எழுத்தாம்

குறட்டாழிசை பா

"ஐ" வெனும் வார்த்தை தலைவனின் செயலால் மகிழ
ஆச்சரிய மொழிச் சொல்லே ஆதியில் தோன்றியது

குறள்வெண்செந்துறை பா

"ஒ"வெனும் ஒலிக்குறை எழுத்து ஏளனம் பேசும்
மக்கள் உச்சரிக்கும் வளமிகு சொல்லாய் ஆனதாம்

குறட்டாழிசை பா

"ஓ" வெனும் ஓங்கிய நெடுஞ்சொல் ஒலிப்பால் எச்சரித்து
ஒதுங்க செய்யும் காவல்மிகு வார்த்தையின் முதலாம்

குறள்வெண்செந்துறை பா

"ஒள"வெனும் நெடுங்கணக்கின் கடைசி எழுத்து மருந்தென
மாந்தரை காக்கவே இயற்கையால் ஆனதோர் சொல்.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (12-Feb-21, 10:48 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 60

மேலே