அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம்
ஆளுங்கட்சி சார்ந்த ஊழியர்களைக் கொண்டே
சில பேருந்துகள் குறிப்பட்ட தடங்களில் இயக்கப்பட
தொக்கிய வழித்தட தொகைகள் முழுத்தொகையாய்
தொடர்ந்து அவ்வழித்தடத்தில் பயணிப்போர் கேட்டால்
பேசாதே இறங்கிக் கொள் நடத்துனர் எச்சரிக்கை
அலுவலகம் செல்ல அடிந்து பிடித்து பயணித்தால்
ஆவேசமாய் பதிலளிக்கும் அரசு பேருந்து ஊழியர்கள்
ஆண்டுக்கான ஊதிய உயர்வுக்கான போராட்டமாம்
ஐந்தாண்டாய் ஏதும் ஊதிய உயர்வில்லையாம்
புதியதாய் பேருந்து வாங்கி இயக்கும் மாநில அரசு
பணியாளர்களுக்கும் குடும்பம் உள்ளதை மறக்கலாமா
ஓர் அரசு வெற்றி நடைபோடுகிறது என்றால்
எல்லா துறையிலும் வெற்றி பெற்றது என்றே பொருள்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (25-Feb-21, 9:42 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 28

மேலே