ஐஞ்சொற்பா - 2

தங்கத்தில் முதலீடு
நகையில் இல்லாமல் கட்டியில்
பெண்களுக்கு கோபம்.

போதை திரவங்கள்
அரசாங்கத்தின் வருமானத்திற்கு விற்பனை
மக்கள் நலத்திடங்களுக்காக,

ஓர் ஆணையினால்
ஜாதிமதத்தை எளிதில் நீக்கிடலாம்
வாக்கிட மாட்டார்களே.

விதைப்பு தெரியாது
விதைக்கான வழக்கில் நீதிபதியாய்
நியாயமான தீர்ப்பாகுமோ.

காம உறுப்புகள்
கையிலேயே இருந்தால் கற்பனையே
குற்றங்கள் குறையுமே.

பணமே இல்லாமல்
எல்லா பரிவர்த்தனைகளும் பொருளால்
பதுக்கல் இருக்காது.

உணவை விற்காதே
தமிழ்ச்சமூதாயத்தின் தாரக மந்திரம்
சேவைவரி அதிகமதற்கு.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (26-Feb-21, 7:57 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 35

மேலே