முப்பொழுதில் மாலை நான்

கவிஞனின் கவிதை நான்
கனவின் தேவதை நான்
இரவின் நிலவு நான்
முப்பொழுதில் மாலை நான்
முக்கனியில் மாங்கனி நான்
இருவிழிகளில் திராட்சை நான்
இதழ்களில் தேனமுது நான்
மெளனத்தில் அசையாப் பொழில் நான்
மேனியில் ரோஜாப்பூ நான்
மெல்லிய புன்னகையில் மல்லிகை நான்
மெல்லக் கவிந்திடும் மேற்கு வானம் நான்
இளவேனில் தென்றல் நான்
இதயத்தில் என்றும் காதல் நான்
உனக்காகவே காத்திருப்பேன் நான் !

எழுதியவர் : கவின் சாரலன் (2-Mar-21, 9:23 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 138

மேலே