கண்ணசைத்தாள் புன்னகைத்தாள்
கண்ணசைத்தாள் புன்னகைத்தாள் வானெழில் மேனகை
கண்திறந்தான் கோபமுனி காதலில் வீழ்ந்தனன்
கண்டான் முனிகண்வன் காதல் மழலையை
பண்ணில்வைத் தான்கவிதா சன் !
பா --ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
பாவில் கதை இருக்கிறது காவியம் இருக்கிறது கவிஞன் இருக்கிறான்
தெரிந்தவர்கள் சுருக்கமாகவோ விளக்கமாகவோ சொல்லலாம்
படம் : காவிய நாயகியின் ஓவியமே