பேருந்தில் அவளும் நானும்
அத்தனை கூட்டத்திலும்
தென்றல் அசைவில்
அவள் காதோரம்
அந்த கம்மல் அசைய
சிறு நளினம்
சிறு புன்னகை
பத்து அடி தூரம் தான்
அதில் பத்து பார்வைகள்
ஒவ்வொரு பார்வையும்
ஒவ்வொரு கவிதைகள்
என் இளமையை
கொன்றது
என் பார்வையை
மாற்றியது
என் ரசனையை
எனக்கு மீட்டுத்தந்தது
பேசா மொழியொன்றை
உணரக்கண்டேன்
காணா காட்சி ஒன்று
அதையும் காணக்கண்டேன்
ஏதோ ஓர் உணர்வு
மனதில் சிறு பாரம்
குறைந்தது போல
அனைத்திற்கும் உன்
விழியே காரணம்
நிம்மதி இழந்த என் வாழ்வில்
சில நிமிடம் என்னுடன்
பயணித்தாய் என்னை
எனக்கு மீண்டும் காட்டினாய்
அத்தனை முகம்
இருந்தும் என்னை மட்டும்
நோக்கியது ஏனோ ?
இது ஒருபோதும்
தொடராது எனினும்
மனம் நினைவு கொள்ளும்
அப்பேருந்தை காணும் போதும்
அப்பாடலை கேட்கும் போதும்
மீண்டும் சந்திக்க வாய்ப்பில்லை
கற்பனையில் சில காலம் கடக்கும்
உனக்கும் எனக்கும்
என் எழுத்தை தூண்டிய
என் தென்றலே
உன் முகம் அறியேன்
புன்னகை அறியேன்
உன் பெயர் மட்டும்
அறியாதேனோ ?
இந்த வழிப்போக்கனின்
வாழ்விலே வந்து சிறு உந்துதலை
தந்தாய் என் எழுத்தில்
இன்று ஓர் அங்கம் வகிக்கிறாய்
கற்பனைக்கு அளவில்லை
கவிக்கு வயதில்லை
உன் புன்னகைக்கு
ஓர் நிறைவில்லை
நன்றிகள் பல
எழுத்து சே.இனியன்