வர்ணனை
கட்டளைக் கலித்துறை
அம்பள . மெவ்வள வவ்வள வேவிழி ஆர்த்தகொவ்வை
செம்பள மெவ்வள வவ்வள வேயிதழ் சீர்கொள்வஞ்சிக்
கொம்பள வெவ்வள வவ்வள வேயிடை கூறேலுமிச
சம்பள மெவ்வள வவ்வள வேதனம் தையலுக்கே
அக்காலத்தின் பாடல் ஒன்றில் பெண்ணின் அவயங்கள்.இப்படித்தான்
இருக்கவேண்டும் என்று ஒரு புலவர் வர்ணிக்கிறார். இந்தப் பாடல்
தெனாலிராமன் படத்தில் M.N.நம்பியார் புலமைப் போட்டியில் கையாளு
வதைக் காணலாம். இப்பாடல் கட்டளைக் கலித்துறை வகையாகும்.
இப்பாடலின் ஒவ்வொரு வரியிலும் புள்ளியை விட்டுவிட்டு எண்ண
தவறா மல் 16 எழுத்துக்கள் இருக்கும்.