ஆழி💥

ஆழி💥

நீல கடல் ஓரத்திலே
நாணத்துடன் நின்றிருந்த நங்கை
நான்முகன் படைப்பின் பேரதிசயமோ
வானத்தில் இருந்து விழுந்த ஒற்றை நட்சத்திரமோ
ஒரே ஒரு ஓர விழி பார்வையால்
என் உள்ளத்தை ஆழி பேரலை என
உலுக்கி துவம்சம் செய்து
காதல் அலையில் மூழ்கடித்து
இதயத்தை பியர்த்து எடுத்து
அவள் இதய கோயிலில் வைத்துகொண்டாள்.

விந்தைகளை விழியில் தேக்கி
வைத்திருக்கும் வினோதம்
அலைகடலென அலையலையாய்
கருங்கூந்தல் காற்றில் பறக்க
வானத்து முகிலினங்கள் பொறாமைபட்டு முகவரி மாற்றிகொண்டது
கயல் விழியாளின் கண்களை கண்ட
துள்ளி விளையாடும் கடல் மீன்கள் அழுக்காறு அடைத்து ஆழ் கடல் நோக்கி
விரைந்து நீந்தியது
மல்லிகை மலர் மீது காதல் கொண்ட வெண்ணிலவு
கடலோரம் கால் முளைத்த புது நிலவை கண்டு
மேகமிடையே நாணம் கொண்டு தன்னை மறைத்து கொண்டது
மாதுளம் இதழாளின் சிவப்பை கண்டு
செங்கதிரோன் வீரியத்தை வீனாக்காமல்
பாங்காக  அடங்கியது ஒடுங்கியது கடலுகுள் பவ்வியமாக
அவ்வப்போது ஆழியில் பிறக்கும் ஈர காற்றால்
கோடை ஆறு போல் ஆன அவள் முந்தானை
மெலிந்து சிறு கோடு என ஆகிவிட
அடங்க மறுக்கும் அவயங்கள் இரண்டும்
அவளுக்கு ஆண்டவன் படைத்த பொக்கிஷங்கள்
கானல் நீர் என இல்லாத இடை அதை தாங்கி பிடித்தது அதிசயம் அல்ல ஆச்சிரியம் அபூர்வம்
காதல் கொண்ட கப்பல்கள் தடுமாறியது
நடுகடல் தாண்ட மறுத்தது
இன்ப கடலில் மூழ்கி
முத்தெடுக்க முயன்றது
ஆழ்கடல் நோக்கி பயணித்தது
சிப்பிகுள் முத்தை கண்டெடுத்தது
ஆழியிலே மலர்ந்த காதல்
அந்தரங்கத்துடன் பயணித்து
ஆர்ப்பரித்தன
ஆலாபனை செய்தன
ஆலிங்கனம் செய்தன.

- பாலு.

எழுதியவர் : பாலு (26-Mar-21, 9:10 pm)
சேர்த்தது : balu
பார்வை : 205

மேலே