புத்தகத்தின் பக்கங்கள் விரிந்தது போல்
புலரும் பொழுதினில்
பொய்கையில் பூத்திருந்தது
ஒரு தாமரை
புத்தகத்தின் பக்கங்கள்
விரிந்தது போல்
புன்னகை புரியும்
ஒரு காரிகை போல் !
புலரும் பொழுதினில் பொய்கையில் தாமரை
பூத்தது புத்தகத்தின் பக்கங்கள் போலவும்
புன்னகை பூத்து இதழ்கள் விரிக்கும்
கவினெழில் காரிகைபோ லும் !
-----இயல்பான வரிகள் இன்னிசை வெண்பாவாக ஓர் இயற்கைக் கவிதை .
இரண்டும் அதனதன் தன்மையில் இனிமையாக உள்ளதை
கவிதை ரசிகர்கள் நீங்கள் அறிவீர்கள் .