காதல் சொல்வாயா
பல முறை பார்த்தும் என் பார்வை உன்னை அகல மறுக்கிறது!
பார்க்காத நேரம் எல்லாம் என் இருதயம் உன் நினைவில் கனக்கிறது!
துப்பட்டாவில் இருந்து புறப்படும் தென்றல் என் தேகத்தில் புது ராகம் மீட்டிச் செல்கிறது!
தொட்டுவிடும் தொலைவில் நீ இருந்தும் என் இதழ்கள் ஏனோ மலர மறுக்கிறது!
மொட்டு விட்ட மலரே!
உன்னை நுகர்ந்து பார்க்க விரும்புகிறேன்!
மகரந்த துகள் கொண்டு என் மனதில் காதல் வாசம் வீசிச் செல்லடி!