தேடல்
தேடல் என்பது உலக நியதி
மழை தேடுவதோ கார் மேகத்தை
மண் தேடுவதோ வான்சுரக்கும் மழையை
நீரோட்டம் தேடுவதோ பாயும் நதியை
நதி தேடுவதோ ஆர்ப்பரிக்கும் கடலை
பணத்தை மட்டும் தேடுபவன் உலோபி
பிறருக்கும் பொருளை தேடுபவன் பரோபகாரி
பசிக்கு இரை தேடுவது விலங்கு
பசியில்லாமல் வேட்டையை தேடுவதோ மனிதமிருகம்
தனக்குள் தன்னை தேடுபவன் அறிஞன்
தன்னை பிறரிடம் தேடுபவன் அறிவிலி
கடவுளை கல்லில் தேடுபவன் தற்குறி
கடவுளை எவ்வுயிரிலும் தேடுபவன் ஞானி
தேடல் என்பதற்கு கடவுளும் விதிவிலக்கல்ல
தான் தொலைத்த அமைதியான பூமியை
அன்பும் அருளும் அறமும் நிறைந்த
அமைதிப் பூங்காவை தேடிக்கொண்டே இருக்கிறார்