புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
கழிந்தன நாட்கள் பல
கழிந்தன வாரங்கள் பல
கழிந்தன மாதங்கள் பல
கழிந்தது சார்வரி வருடம்
வரப்போவது பிலவ வருடம்
வரவேற்போம் வரிந்து கட்டி
வானவர்கள் அருள் பொழியட்டும்
விடியலுக்கு நல்வழி காட்டி
கழியட்டும் கரோனா வியாதி
கழற்றுவோம் முக கவசந்தனை
கைகுலுக்குவோம் பயமேதும் இன்றி
கட்டி அணைப்போம் கவலையின்றி
இல்லமே அலுவலகம் என்ற
இருண்ட நிலை மாறி
இனிய உலகம் பிறக்கட்டும்
இனி வரும் வருடத்திலாவது
பெய்யட்டும் மாதம் மும்மாரி
பாயட்டும் நதிகள் கரைபுரண்டு
பசுமையாய் விளையட்டும் பயிர்கள்
பசியின்றி மானுடம் தழைக்கட்டும்
பிலவ வருடமே ஓடி வா
பிணியற்ற பொன்னாட்களை சுமந்து வா
பயமின்றி உன்னுடன் பயணிக்க வா
பொன்னான வருடமென்று ஆராதிக்க வா
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்