காதல் கோலம்
அதிகாலை வேலையில்
குளிர்ந்த காற்றுடன்,
கைவளையல் சத்தமும்
அதற்க்கிசையாய் கொலுசின் ஓசையும்,
உன்னிருவிரல் பிடியில் வரையும்
கோலமாவின் வர்ணங்களும்,
பக்தி பரவசமூட்டும் கானங்களும்,
கோனார் டீகடை பெஞ்சில் இருந்து,
பார்த்து ரசிக்கிறேன்னுன்னை
செய்திதாளை மறைத்து,
இட்டுவித்த கோலம்
அதை தொட்டுவிட்ட எறும்புகள்,
இனி எங்கு சந்திப்பது என்று
செயற்கையாய் செய்து விடுகிறாய்,
கோல நடுவில் சாணிப்பிள்ளையாரில்
காத்திருக்கிறேன் கணேசனிடத்தில்
வெள்ளூர் வை க சாமி
(அண்ணா நூற்றாண்டுநூலகம்)