காதல் ஏக்கம்
பதினான்கு சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சாலை ஓர மாந்தோப் புத்தாழ்
மரத்தின் கிளையில் காதலி
மாலை வேளை பாங்கி யருடன்
நல்தெம் மாங்கும் பாடவள்
நூலை மனையி ணைத்து தொங்கல்
ஊஞ்ச லிலவர் உந்தினர்
மாலை பீளை பிச்சி மல்லிக்
கைப்பந் தாக்கி ஆடிட
சோலை மான்கள் மருள பூங்கா
குயில்ம யிலாடி கூவவும்,
மூலை முடுக்கெங் குமார வாரக்
கோலா கலமும் சூழவே
வேலை முடிந்து பணியர் வீடு
சென்று கண்டனர் நிறைவு
காலை பார்ப்போம் காதல் என்று
நானும் குடிலை அடைந்தேனே
.....