அவள்

அவன் அன்று தந்த பார்வையாம்
மோகமுள் அவள் இதயத்தைத் தைக்க
காமம் பீறிட்டு எழுந்திட அதை
அடைத்திட அவனை நாடி இன்று
அவள் ..... முற்றத்தில் காத்து நிற்க
பகலும் போனது இரவும் வந்தது
நிலவும் நீலவானில் வலம் வந்தது
இன்னும் அவன் வரவில்லை பாவம்
விரக தாபத்தில் அவள் நெஞ்சில்
அவன் பார்வையை ஏந்தி அவன் வரவுக்காக

ஒரே பார்வைக்கூட சிலரை இப்படி
பித்தாக்குமோ.... பித்தாக்கிறதே பாருங்கள்
அவனுக்காக பொழுதும் மறந்து காத்துநிற்கும்
அந்த அவளை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (18-Apr-21, 10:25 am)
Tanglish : aval
பார்வை : 170

மேலே