கண்ணனின் மீரா

கண்ணன் குழல் ஓசையில் வந்த
பண்ணின் ஒலி ராதையின் காதில்
'ராதே, ராதே' என்று கேட்டதாம்..
அவனைச் சுற்றி நிற்கும் பசுக்கள்
காதில் தாய்ப் பசுவின்' அம்மா'
என்று அழைக்கும் நாதம் கேட்டதாம்...
கண்ணன் மையலில் தம்மை மறந்த
கோபியர் காதில் 'இதோ வருகின்றேன்
கொஞ்சிக் குலாவி மகிழ என்று கேட்டதாம் ...
இதை எல்லாம் கண்டும் ஒன்றும்
தெரியாதவன் போல் மாமாயன் கண்ணன்
வேணுகானம் இசைத்துக் கொண்டு இருக்க..
அவன் புன்னகையில் என்னையே முழுவதுமாய்
தந்து என்னையே மறந்த நான்
அவன் அறியா காதலி மீரா என் பெயர்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Apr-21, 1:24 pm)
Tanglish : kannanin meera
பார்வை : 150

மேலே