இன்பமும் துன்பமும்

காலையும் மாலையும்
வந்து வந்து போகுது ..!!

மனிதனின் வாழ்க்கையில்
இன்பங்களும் துன்பங்களும்
வந்து வந்து போகுது ...!!

வாழ்க்கையில்
கடந்து செல்ல வேண்டிய
துன்பங்களை
சுமந்துக் கொண்டு
நிற்கும் மனிதன்
இன்பத்தை துறந்து
கவலையோடு
தலை குனிந்து வாழ்கிறான்...!!

துன்பங்களை
கலைந்து செல்லும் மேகமாக
நினைக்கும் மனிதன்
இன்பமாக வாழ்ந்து
தலை நிமிர்ந்து நடக்கிறான்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (28-Apr-21, 9:10 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : inbamum thunbamum
பார்வை : 268

மேலே