என்னை ஏன் மறந்தாய்
கழுத்தில் மங்கலநாண் சூட்டி கணவன் கரம் கோர்த்து செல்லும் கனவு பெண்ணே!
கண்ணுக்குள் என்னை வைத்து கனவுக்குள் கவிதை படித்தவளே!
கல்லூரி சோலையிலே கதை கதைத்த காட்சிகளை மறந்து போனாயா!
காவேரி நதிகரையில் பெயர் எழுதி ரசித்த வேளையை மறந்து போனாயா!
கண்ணாடியில் முகம் பார்த்து கன்னத்தில் முத்தம் பதித்த நொடியை மறந்து போனாயா!
கண்னுக்குள் கனவு வளர்த்து காலம் முழுவதும் கை சேர்த்து வாழ விரும்பினேன்!
ஆனால்
நீயோ கைகளை உதறிவிட்டு காற்றிலே பறந்து விட்டாய்
உன் கனவனுடன்!