கார்முகில் கூந்தல் காற்றிலாட

கார்முகில் கூந்தல் காற்றிலாட
பார்வையில் எழில்விழி கயலாட
போர்புரி விற்புருவம் கணைதொடுக்க
வார்முலை சங்கத்தமிழ் ஓவியமே !

----ஒரேஎதுகை முச்ச்சொல்லால் நாலடியால் ஆன
வஞ்சி விருத்தம்


கார்முகில் கூந்தல்
பார்வையில் கயலெழில்
போர்புரி விற்புருவம்
வார்முலை ஓவியம்நீ

----ஒரேஎதுகை இரு சொல்லால் நாலடியால் ஆன
வஞ்சித் துறை

கார்முகில் கூந்தல்மென் காற்றினி லாடிட
பார்வையில் பூவிழிகள் மீனென துள்ளிட
போர்புரி விற்புருவம் காமன் கணைதொடுக்க
வார்முலைப் பேரெழி லே !

கார்முகில் கூந்தல்மென் காற்றினி லாடிட
பார்வையில் பூவிழிகள் மீனாக - நேர்வந்தாய்
போர்புரி விற்புருவம் காமன் கணைதொடுக்க
வார்முலைப் பேரெழி லே !

----பாக்கள் இன்னிசை நேரிசை வெண்பாக்களாக

எழுதியவர் : கவின் சாரலன் (11-May-21, 10:10 am)
பார்வை : 62

மேலே