இயற்கை
மயில் தோகை அழகு மயிலழகு
மயில் ஆட்டம் பேரழகு ஆயின்
மயில் குரல் அழகல்லவே இப்படித்தான்
சோலைக்குயில் பாட்டு தேவ கானம்
பார்வைக்கு அக்குயிலும் அழக ல்லவே
இப்படித்தான் ஒன்றிலே எல்லாம் ஆண்டவன்
வைப்பதே இல்லை படைப்பில்