விழித்தெழு தமிழா

விண்ணும் மண்ணும் வியர்க்கும்
கண்ணும் காதும் அறியும்
கீழடியும் நம்மை புகழும்
கிழக்கு திசையும் போற்றும்

கால்நடையாய் வானெங்கும் நடந்து
கம்பு ஊன்றி நின்றான்
கடலையும் கடந்து வென்று
கண்டமெல்லாம் தமிழை பதித்தான்

மதங்களை ஏங்கே கண்டோம்
சாதிகளை ஏங்கே அறிந்தோம்
கண்மூடி நின்றால் கானலாய்
தேசமெல்லாம் இருண்டு கிடக்கும்

விழித்தெழு தமிழா தேசமெல்லாம்
கயவா்களின் பிடியிலிருந்து மீண்டெழ
விழித்தெழு தமிழா தேசமெல்லாம்
அடக்கிய கரங்களை அடக்கிட

எழுதியவர் : (16-May-21, 7:27 pm)
சேர்த்தது : வினோ பாரதி
Tanglish : vizhithelu thamila
பார்வை : 64

மேலே