விலகளின் வேதனை

நீ சொத்து சுகம் சேர்க்கவில்லை
வேதனையாய் இருக்கிறது 
வாழ பிடிக்க வில்லை உன்னுடன் 
விலகி ச்செல்கிறேன்
என கூற த்தெரிந்த உனக்கு

உன் உடலெனும் சுனையில்
சுகம் எனும் நீர் அருந்த
எத்தனை வெறி நாய்கள்
காத்திருக்கிறது தெரியுமா உனக்கு

ஆபத்துக்கு பாவமில்லை என
பொய் வார்த்தைகள் கூறி - உனை
பதம் பார்க்க காத்திருக்கும் - நரிகள் எத்தனை தெரியுமா உனக்கு

மண் உண்ணும் உடலை
மனிதன் உண்டால் என்ன - என
தத்துவம் பேசும் தரம்கெட்ட மனிதர்கள்
எத்தனை தெரியுமா உனக்கு

அவசர உதவி கேட்டால்
ஆசை வார்த்தை கூறி - உனை
அடைய எண்ணும் மிருகங்கள்
எத்தனை தெரியுமா உனக்கு

ஆசைக்கு இணங்க மறுத்தால்
அவிசாரி என பேசும்
அறிவு கெட்ட ஜென்மங்கள்
எத்தனை தெரியுமா உனக்கு

நீயே முடிவு செய்
மானமின்றி வலி நிறைந்த வாழ்வா ?
அல்லது மானத்துடன் வலி நிறைந்த வாழ்வா ?
எந்த வேதனை பெரிய வேதனை என்று !.....

எழுதியவர் : மேஜர் முருகன் (23-May-21, 4:12 pm)
சேர்த்தது : Major Murugan
பார்வை : 91

மேலே