பிழைத்துப் போகட்டும்
சரியென நினைத்த இடங்களில்
நீ தவறியும்
தவறென நினைத்த இடங்களில்
நீ பொருந்தியும்
நெடு நாட்களாகி விட்டது.
உன்னிடம் எண்ணி வியந்தவையெல்லாம்
ஏளனமாய்ப் பார்க்கின்றன என்னை.
இவ்வளவுதானா
நீயும்....!
இது கற்பிதப் பிழையுமல்ல
காலப் பிழையுமல்ல
என்பதே கலி.
நகர விரும்பா எதனையும்
நகர்த்த முயலாதே!
அதுவாவது ‘பிழைத்துப்’ போகட்டும்.
நர்த்தனி