தப்பி விடுகிறார்கள்
நீ துகிலுரியப்பட்டபோது
நானும் அரசவையில் அமைதியாய்
அமர்ந்திருந்தேனே
அறிவாயா நீ
ஏனென்று தெரியுமா உனக்கு ?
துரியோதனன் தந்த உணவை
உண்டதால் தான் என்
குருதி பாழ்பட்டு போனது
இப்பொழுது அர்ஜுனன் எய்த
அம்பால் எனது கெட்ட
இரத்தத்தை அவன்
அகற்றிவிட்டானென்று
திரௌபதியிடம் சொல்லி
பீஷ்மர் தப்பிக்க
நினைத்ததுபோல்
ஓட்டுக்கு பணம் வாங்கும்
நாட்டு மக்கள்
நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள்,
அநியாயங்களை
யாரிடமும் சொல்லாமல்
பாம்புக்கு தலையும்,மீனுக்கு
வாலையும் காட்டி
தப்பி விடுகிறார்கள்.