மெல்ல மெல்ல மேலே ஏறினாள்

மெல்ல மெல்ல மேலதிகாரியின் நற்பெயரை பெற்றாள்
அணியில் உள்ளவன் ஏழு வருடம் இதில் மூத்தவன்
அவனை பின்னுக்குத் தள்ளி எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்தாள்
சனி நியாயிரு என நாள் பார்க்காமல் வேலை செய்தாள் .
எல்லோரும் பாவம் இவள் என சங்கடப்பட்டார்கள்.
ஆனால் அந்த பெண்ணிடம் பார்த்து பயந்து ஓடினார்கள்
எங்கே நம்மையும் வெளியேற்றிவிடுவாளோ என
அவள் அணியில் உள்ளவனை அடிமையாக உருவாக்கினாள்
அவனும் அவள் அழகுக்கு அடிமையாக
அவள் அறிவுக்கு அடிமையாக
அவள் ஆபீஸ் நாயாக பின் சுற்றினான்
அவள் ஒவொன்றாக கீழே தள்ளி மேலே வந்து கொண்டே இருந்தாள்
பாத்திமாவின் செல்ல பிள்ளை ஆனாள்
அவளின் பினாமி ஆனாள்
அவள் மடி கணினியை தூக்கி செல்வாள்
அங்கே ஒருவன் விளையாட்டாக
பாத்திமா ஆளை சொல்வாள்
இவள் அம்பு எய்து வீழ்த்துவாள்
கிண்டலடித்தான்
அதை கேட்டதும் அவளுக்கு கோபம் வந்தது போல் நடித்தாள்
பாத்திமாவிடம் வாதி வைத்தால் சண்டாளி
எல்லோரையும் அதட்டினாள் பாத்தி
ஒருவன் இவளிடம் நீங்க தனி ஆளா என கேட்டு விட்டான் போல
அடையும் பாத்திமாவிடம் சொல்லி அவனுக்கு திட்டு வாங்கி கொடுத்தாள்
அவன் ஓர் பெண்ணிடம் , நண்பியிடம் கை காட்டினான் போல
அதற்கு அவனைப் பலி தீர்த்தாள் பாத்திமா
அவனும் பயந்தான்
யார் வருவார்கள் இவளை அடக்க
இவர்களை அடக்க
அடுத்து அணியில் ஒருவனிடம் வழிந்தாள்
அவன் பிடி கொடுக்கவில்லை போல
உடனே அவனை சைக்கோ என சொல்ல ஆரம்பித்தாள்
எவனொருவன் தன்னுடைய மேல் அதிகாரியோ
அவனை உடனே காபீ, சாப்பாடு என தனியே அழைத்து செல்வாள்
தனியே கூப்பிட்டுப் போல்

எழுதியவர் : கவிராஜா (31-May-21, 12:27 pm)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 199

மேலே