காணவில்லை காணவில்லை!!!
காணவில்லை!!!
நான் பார்த்து வளர்ந்த
பச்சை பசும்
வயல் வெளிகள்,
அன்னார்ந்த்து
பார்க்க வைத்த
தென்னை மரங்கள்,
நான் குதுகலித்து
குளித்த பம்பு செட்டுகள்,
பாட்டு பாடி நாத்து நடும்
பெண்கள் கூட்டம்,
இவற்றின் சுவடுகளை
காணவில்லை,
நாட்டின் முதுகெலும்பான
கிராமங்கள் - இன்று
வறண்டு கிடக்கிறது,
என்று அறியா சமூகம்
வாழும் வரை,
எத்தனை கிராமங்கள்
இழக்க போகிறதோ தங்கள் சுவடுகளை!!!