மெளனம்

சிலநேரங்களில்
மெளனம் சம்மதத்தின்
அறிகுறி...
சிலநேரங்களில்
மெளனம் ஏற்றுக்கொண் டதன்
முத்திரை...

சிலநேரங்களில்
மெளனம் விட்டுக்கொடுத்தலின்
வியாக்கியானம்...
சிலநேரங்களில்
மெளனம் பிடிவாதத்தின்
சாதிப்பு...

ஆனால் உன் மெளனம்
என்னை கொல்லாமல் கொல்லும
கொலைகாரனாகவல்லவோ
இருக்கிறது?

____________________________

எழுதியவர் : ரோகிணி (4-Jun-21, 8:20 pm)
சேர்த்தது : Rohini
பார்வை : 111

மேலே