செம காமெடி

🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

*காமெடி*

படைப்பு *கவிதை ரசிகன்*

🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

*ஆசிரியர்*

அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸ்.....

*மாணவன்*
அப்படின்னா அமெரிக்காவை ஒளித்து வைத்தது யார்....சார்?

😂😂😂😂😂😂😂😂😂😂😂

*ஆசிரியர்*

குருவிக்குஞ்சு குளிரில் நடுங்குகிறது இது என்ன காலம்...?

*மாணவன்*

இது குளிர்காலம் சார்

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

*மகன்*

அப்பா! கோவிலில் நாம் சாமி ரூமுபுக்குள்ள ஏன் போக கூடாதுன்னு சொல்றாங்க....?

*தந்தை*

போன சாமி கண்ணை குத்திடும்....

*மகன்*
அப்படின்னா நம்ம வீட்ல சாமி ரூமுக்குள்ள போகும்போது ஏம்பா சாமி கண்ணை குத்துல....?

😅😅😅😅😅😅😅😅😅😅😅

*மகன்*

கோயிலுக்கு வெளியே இருக்கிறவங்களை ஏம்பா பிச்சைக்காரனு
சொல்கிறோம் ...?

*தந்தை*

அவிங்க தட்ட காட்டும் போது நாம் காசு போடுகிறோம் அதனாலதான்....

*மகன்*

அப்படினா கோவிலுக்கு உள்ளேயும் ஒருத்தர் தட்டுகாட்டும் போது நீ காசு போட்டியே அவர பூசாரின்னு சொல்ற?

😆😆😆😆😆😆😆😆😆😆😆

*மகன்*

மாமா வீட்டுக்கு போகலாம்னு கூட்டிட்டு வந்துட்டு பாதியிலேயே திரும்பி கூட்டிட்டு போறீங்க....?

*அப்பா*

பூனை குறுக்க போயிருச்சு.... நம்ம வீட்டுக்கு போலாம்....

*மகன்*

இப்ப பூனை குறுக்கப் போனால் யார் வீட்டுக்கு போவீங்க...?

😃😃😃😃😃😃😃😃😃😃😃

*மகன்*

எதுக்குப்பா ஜாதகம் பாக்கறீங்க...?

*அப்பா*

ஜாதகத்தில் என்ன வேலை செஞ்சா லட்சாதிபதியாகலாம் கேட்கத்தான்....

*மகன்*

அப்படினா ஜாதகம் பார்ப்பவர் மட்டும் இன்னும் 100 200 க்கு ஜாதகம் பாத்துட்டு இருக்காரு...?

😃😃😃😃😃😃😃😃😃😃😃

*மாமியார்*

பால சிம்ல வக்கச் சொன்னேனே.... வசசிட்டியா..?

*மருமகள்*

இன்னும் இல்ல.....சிம்ல வக்கிறத்துக்கு செல் போன கழுட்டினா.... கழுட்டவே முடியல....


*கவிதை ரசிகன்*


😁😁😁😁😁😁😁😁😁😁😁

எழுதியவர் : கவிதை ரசிகன் (5-Jun-21, 7:59 pm)
பார்வை : 168

மேலே