திட்டமிடுங்க திட்டமிடுங்க

திட்டமிடுங்க, திட்டமிடுங்க,
திண்டாடாமல் இருக்க திட்டமிடுங்க,
கொண்டாடியே திட்டமிடுக்க.

ஏழையா இருந்தாலும்,
கோழையா போகமல் இருக்க
திட்ட இடுங்க

திட்டமிடுங்க திட்டமிடுங்க,
திணராமல் இருக்க திட்மிடுங்க.
திரும்பத்திரும்ப திட்டமிடுங்க;
திருப்தி அடையும் வரை திட்டமிடுக்க;
தீட்டிய செலவினங்களிலே,
மிச்சம் பிடிக்க திட்டமிடுங்க.
தீராத தலைவழியைப்போக்க திட்டமிடுங்க.

திட்டமிடுங்க திட்டமிடுங்க,
கையிருப்பை கணக்கில் வைத்தே திட்டமிடுங்க;
கடன் வாங்கி;
கடனாளியாகாமல் இருக்கவே,
கண்டிப்பாக திட்டமிடுங்க.

கணக்கு பார்க்காமல் செலவுசெய்பவன் கடன் காரன்
என்பதை கவனத்தில் வைத்தே
திட்டமிடுங்க;
கண்மூடித்தனமாய் செயல்படுபவன்
கவலையே படுவான்
என்பதை நினைவில் வைத்தே திட்டமிடுங்க

ஊசி வாங்கினாலும்;
ஒரு காசு செலவழித்தாலும்;
ஒருமுறையாவது திட்டமிட்டே
செலவழிங்க.

சிறுக சிறுக சேர்த பணமுங்க;
சீக்கிரமா கரையாமல் இருக்கவே
திட்டமிடுங்க.
சிக்கனமாக இருக்க திட்டமிடுங்க;
சீரழிந்து போகமல் இருக்க திட்டமிங்க;
சிறப்பான வாழ்க்கையை நடத்த
திட்டமிடுங்க.

திட்டமிடுங்க திட்டமிடுங்க;
தினம்தோரும் திட்டமிடுங்க,
வட்டச்சுழலாம் வறுமை வலையத்தை விட்டு வெளிவர
வளமாக திட்டமிடுங்க.

வசதிவாழ்க்கையுடன் வாழ்ந்து
அழிந்துபோவதைவிட;
வருங்காலத்தையும் கணக்கில் கொண்டு திட்டமிடுங்க.

திட்டமிடுங்க திட்டமிடுங்க,
திரும்பத்திரும்ப திட்டமிடுங்க,
சரியாக திட்டமிடுங்க,
சரியாது இருக்க திட்டமிடுங்க.

சவாலை ஏற்றே;
சரியாத தவறா என்று உணர்ந்தே திட்டமிடுங்க

திட்டமிடுங்க திட்டமிடுங்க ;
தீட்டிய மூளையுடன்,
உரசி உரசி திட்டமிடுங்க,
மகிழ்வோடு வாழ திட்டமிடுங்க.

திட்டமிடுங்க திட்டமிடுங்க,
இலக்கை எட்ட திட்டமிடுங்க,
இருப்பதையும் இழந்திடாமல் இருக்க
திட்டமிடுங்க

திட்டமிடுங்க திட்டமிடுங்க,
தெளிவாக திட்டமிடுக்க;
திடமாக திட்டமிங்க;
வரவுக்கு தகுந்தாற்போல் செலவு செய்ய
திட்டம் இடுங்க.

திட்டமிடுங்க திட்டமிடுங்க,
வாழ்க்கை சுமையில்லாமல் இருக்க
திட்டமிடுங்க.

திட்டமிடுங்க திட்டமிடுங்க;
கையிருப்பை கவனமாகக் கொண்டு திட்டமிடுங்க;
கண்ட படி செலவு செய்வதைவிட;
கச்சிதமாக வாழகற்றுக் கொள்ள,
திட்டமிடுக்க.

திட்டமிடுங்க திட்டமிடுங்க;
திடுதிப்புன்னு வரும்
சவாலையும், பிரச்சனையையும்,.
சமாளத்து சரிகட்ட திட்டமிடுங்க

திட்மிடுங்க திட்டமிடுங்க.
முன்கூட்டியே திட்டமிடுங்க.

அ. முத்துலேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (5-Jun-21, 9:31 pm)
பார்வை : 38

மேலே