வண்டலூர் சிங்கம்

🦁 வண்டலூர் சிங்கம் 🦁

நீலா சிங்கம் இறந்திருச்சு,
சோதித்துப் பார்த்தால் பெருந்தொற்று !
காட்டுக்கு ராஜா நீதானே ,
கவனமாய் சொல்வதை கேட்டுக்கொள் .
காடடங்கு உடனே போட்டுவிடு ,
கோழிக்கு மட்டும் தளர்வுகொடு !
முட்டை உணவை விலங்குண்ண ,
திட்டம் ஒன்றை வகுத்துவிடு !
எல்லா விலங்குக்கும் முகக்கவசம் ,
இப்போதே செய்ய ஆர்டர் கொடு !
விலங்கு இடைவெளி கட்டாயம் ,
மறந்தும் மானிடம் நெருங்காதே !
கவச உடை நீ உடுத்திக்கொள் ,
கொரோனா டெஸ்ட்டும் எடுத்துக்கொள் !
முன்போல் வேகமாய் நடக்காதே ,
மூச்சுத்திணறல் ஏற்படலாம் !
ஆக்சிஜன் சிலிண்டர் தீர்ந்திடுச்சு
அடுப்புச் சிலிண்டரே மீந்திருக்கு !
சானம் கரைத்த நீராலே ,
அடிக்கடி கால்களை கழுவிக்கொள் !
அவசரமாக அடிப்புக் கூட்டி ,
கபசுரகுடிநீர் காய்ச்சி கொடு !
உறுதி செய்தால் நோய் தொற்று ,
தனிமைப்படுத்து பாய் போட்டு !
தடத்தில் நீயும் தகரம் வைத்து ,
கிருமியை அப்பப்ப பயமுறுத்து !
வண்ண வண்ண பூஞ்சையினால் ,
கண்ணில் பார்வை போய்விடலாம் .- அப்ப
கதையில் வந்த சுண்டெலியும்
நிஜத்தில் முதுகில் ஏறிடலாம் !
காட்டை விட்டு காடு சென்றால் ,
ஈபாஸ் நிச்சயம் எடுக்கச் சொல் !
மாலைநேரம் அனுதினமும் ,
மரணிக்கும் விலங்கு கணக்குகொடு !
காடடங்கு பற்றி கருத்துக்கேட்டு ,
வாராவாரம் நீட்டிக்கனும் !
அமேசான் காட்டு இலை பறித்து ,
அனைத்துக்கும் தடுப்பூசி பயன்படுத்து !
இரண்டாம் அலையங்கு இருக்காது ,
ஏனென்றால் தேர்தல் கிடையாது..!
🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁

எழுதியவர் : க.செல்வராசு (5-Jun-21, 6:03 pm)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 35

மேலே