காசு நீ
ஏன்டா பெரிய தம்பி உம் பொண்ணுப் பேரு என்னடா?
@@@@@@@
எதுக்கு பெரியம்மா கேக்கறீங்க?
##@@@@@@
எப்படியும் இந்திப் பேரைத்தான் வச்சிருப்ப. இப்ப நம்ம சனங்ககிட்ட உள்ள போட்டி என்னன்னு தெரியுமாடா பெரிய தம்பி?
@@@@@@@@
தெரியாதுங்க பெரியம்மா.
@@@@@@@
அட கூருகெட்ட பயலே. நம்ம சனங்ககிட்ட கடுமையான போட்டி. என்ன தெரியுமா?
எல்லாம் போட்டி போட்டு புதுபுது இந்திப் பேருங்கள அவுங்க பிள்ளைங்களுக்கு வைக்கிறாங்க. இந்திப் பேருன்னு நெனச்சுட்டு அவுங்களா பல இந்தி மாதிரி உள்ள பேருங்கள உருவாக்கி வைக்கிறாங்க.இந்திப் பேருங்கள்ல நெறையப் பேருங்களுக்கு அர்த்தம் இவ்லை. இல்லன்னா அந்தப் பேருங்க பெயர்ச் சொல்லா இருக்காது. சரி நீ உம் பொண்ணுக்கு வச்ச பேரு என்னடா பெரிய தம்பி?
@@@@@@@@
எம் பொண்ணுப் பேரு 'ஹாசினி.
@@@@@@@
'காசு நீ'. 'காசுநீ' நல்லாப் பேரு வச்சீடா. ஆப்பிரிக்காவில ஒரு பொம்மள ஒரே மகப்பேறில பத்து கொழந்தைகளைப் பெத்தாளம். அது மாதிரி உன் மனைவிக்கு இன்னும் (இ)ரண்டு மூணு பெண் கொழந்தைங்க பொறந்தா 'பணம் நீ', 'பைசா நீ', 'ரூபாய் நீ', 'நாணயம் நீ' -ன்னெல்லாம் பேரு வைக்கப் போறயா?
@@@@@@
போங்க பெரியம்மா. என் மூத்த பொண்ணு பேரு 'ஹாசினி'. 'காசு நீ' அல்ல. நல்ல அர்த்தம் உள்ள பேரு.
@@@@@@@
என்னமோடா பெரிய தம்பி. இந்த 'காசு நீ' நல்ல இல்லடா.
#@@@@@@@@@@
????????????₹
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Hasini = happy, full of laughter.