புரிந்தது
"புரிந்தது"
" கருப்பென வெறுத்தேன்,
மழையில் நனையாது காத்தது!
'பழைய செருப்பு' என சிரித்தேன்,
சூடு ஏற்று வேர்த்தது!
'வெறும் பெருசு', என மறுத்தேன்,
ஓய்ந்தும், ஊதியம் தந்து கரை சேர்த்தது!
நான் வெறுத்ததெல்லாம் என்னை பொறுத்தது,
நான் மறுத்தெல்லாம் என்னை அணைத்தது,
புரிந்துகொண்டேன், இது தான் வாழ்வு.
'வெறுப்பும், மறுப்பும்' மடையருக்கு,
'பொறுப்பும், சிறப்பும்' பொறுமை
உடையவருக்கு!."